தமிழ்முரசம் வானொலியின்
வெள்ளி விழா
2022

தமிழ்முரசத்தின் வெள்ளிவிழாவில் "பொன்மாலைப்பொழுது 2022" நிகழ்வானது கடந்த 09.04.2022 அன்று "Kirkegata 11, 2000 Lillestrøm" எனும் முகவரியில் அமைந்திருக்கும் "LILLESTRØM KULTURSENTER" என்ற பண்பாட்டு மண்டபத்தில், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் இனிதே நடைபெற்றது.

வெள்ளிவிழா ஆண்டின் பொன்மாலைப் பொழுது நிகழ்வில், திரையிசைப்பாடல் போட்டிகளில் இளம் செல்லக்குயில், செல்லக்குயில் மற்றும் வானம்பாடிகள் ஆகிய பிரிவுகளில் வெற்றி மகுடம் சூடி விருதுகளை வென்ற வெற்றியாளர்களான ஜெயஸ்வகதி கிருஷ்ணசாமி, தானுகி கோணேஸ் மற்றும் திவானி உதயகுமார் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் எமது பாராட்டுகளை தெரிவிக்கின்றோம்!